பிள்ளைங்களை வளர்ப்பதில் பெற்றோர்களின் கடமை எமது கலைக்கழகத்தின் அனுபவதிலிருந்து -LearnToReach

குழந்தைகளிடம் நேரம் செலவிடல் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் போது மொபைல் ஃபோன்களை ஆஃப் செய்து வைப்பது ஆரோக்கியமான ஒன்று. இது கவனச்சிதறல்களை உண்டாக்காது. குழந்தைகள் மீதான கவனத்தை அதிகப்படுத்தும். பெரியவர்கள் செய்யும் போது குழந்தைகளும் மொபைல் ஃபோனை எடுக்கமாட்டார்கள். குழந்தைகள் தொலைக்காட்சி மற்றும் செல்போனில் அதிகமாக கவனிக்கும் செயல்களை நாம் நேரடியாக விளையாடும் பொழுது இத்தகைய பயனில்லா பொழுதுபோக்கை தவிர்ப்பார்கள் . ஆசிரியர் சொல் கேட்டு நடத்தல் தன்னை விட தனக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியைக்கு தன் மாணவனை பற்றிய புரிதல் சிறப்பாக இருக்கும் ஆகையால் ஆசிரியை சொல் கேட்டு நடப்பவன் வாழ்க்கையில் என்றும் துவண்டு தோல்வி யுற மாட்டான். அவர்கள் சொல்பவை என்றும் நன்மைக்கே அவை அனைத்தும் அனுபவத்தி ன் பாடம் என்பதில் நம்பிக்கை வேண்டும். "Every lesson, a stepping stone to success: Learn from your teacher, not from your mistakes." மரியாதை வார்த்தைகளை பிள்ளைகளிடம் கொண்டுசேர்த்தல் தெரிந்த மற்றும் தெரியாத நபர்களை குழந்தைகள் பார்க்கும் போதும் பழகும் போதும் மரியாதையுடன் வாங்க போங்க , அவர் இவர்கள் என்றும்...